Recent Posts


வாட்ஸ் அப் பயன்படுத்துவதில் முதலிடம் இந்தியா !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
வாட்ஸ் அப்பை அதிகம் பயன் படுத்துபவர்கள் இந்தியர்கள் தான் என்று காம்ஸ்கேர் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மெயில், ஆர்குட், ஃபேஸ்புக் என்று கணினியை மையப் படுத்திய தொழில்நுட்ப வளர்ச்சியில்

வாட்ஸ் அப் செல்போனை மையப் படுத்துவ தால் அதற்கான மவுசு அதிகம் என்று சொல்லலாம்.

வாட்ஸ் அப்பை அணுக ஸ்மார்ட் போனே போதும் என்னும் நிலையின் காரண மாக, அது ஃபேஸ்புக்கை விட எளிதில் இளைஞர் உலகத்தில் ஊடுருவி விட்டது.

மொபைல் எண்களின் வழியாக தனிநபர் மற்றும் கூட்டு உரை யாடலுக்கு பயன்படும் சமூக வலை தளமாக வாட்ஸ் அப் இயங்கி வருகிறது.
கோடிக்கணக் கான மக்களுக்கு குறுஞ்செய்தி தகவல் களை அனுப்ப வாட்ஸ் அப் பயன் படுவதால்

ஸ்மார்ட் போன் பயன் படுத்தும் இந்தியர் களில் மூன்றில் ஒருவரது ஸ்மார்ட் போன் சேமிப்புப் பகுதி

நிரம்பி யுள்ளதாக ஏற்கெனவே ஒரு ஆய்வு முடிவில் தெரிவிக்கப் பட்டது.

சமீபத்தில் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவலின்படி, 20 பில்லியன் புத்தாண்டு செய்திகள் இந்தியாவி லிருந்து வாட்ஸ் அப் மூலம் அனுப்பப் பட்டதாக தெரிவிக்கப் பட்டது.

இந்நிலையில் செல்போனில் வாட்ஸ் அப் செயல்பாடு குறித்து காம்ஸ்கேர் என்ற நிறுவனம் உலகம் முழுவதும் ஒரு ஆய்வை நடத்தியது.

அதில் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள் அதிகம் செல்போன் வழியாக வாட்ஸ் அப் செயலியைப் பயன் படுத்துகிறார்கள்

என்று ஆய்வு நடத்திய போது இந்தியர்கள் தான் என்பது தெரிய வந்துள்ளது.

2017-ம் ஆண்டு நிலவரப்படி 89% இந்தியர்கள் ஸ்மார்ட்போன் வழியாக வாட்ஸ் அப் செயலி மூலம் தகவல் தொடர்பை மேற்கொள் கின்றனர்.

இந்தோனேஷியா வில் 87% பேரும், மெக்ஸிகோவில் 80% பேரும் வாட்ஸ் அப் வழியாக தங்கள் கருத்து களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதன் மூலம் செல்போன் மூலம் வாட்ஸ் அப் பயன் பாட்டில் இந்தியா முதலிடம் வகிப்பதாக காம்ஸ்கேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப் பயன்படுத்துவதில் முதலிடம் இந்தியா ! வாட்ஸ் அப் பயன்படுத்துவதில் முதலிடம் இந்தியா ! Reviewed by Fakrudeen Ali Ahamed on July 06, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 THinamnew.blog. All rights reserved
close