Recent Posts


யூடியூப், வாட்ஸ் அப் வசதியுடன் ஜியோ ஃபோன் 2 அறிமுகம் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஜியோ ஃபோன் 2 அறிமுகம் செய்யப் பட்டது. இதில் வாட்ஸ் அப், யூடியூப் வசதிகள் உள்ளன.

இந்த ஃபோனின் வடிவமைப்பு பிளாக் பெர்ரி போன்றுள்ளது. செவ்வக வடிவில் உள்ள இந்த ஃபோனில் குவெர்டி கீ போர்டு இருக்கிறது.

ஜியோ ஃபோன் 2 மாடல் சந்தைக்கு வந்தாலும் கூட ஜியோ ஃபோனின் பழைய மாடலும் சந்தையில் கிடைக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

ஜியோ 2 ஃபோனுடன் ரிலையன்ஸ் நிறுவனம் இன்று ஜியோ கிகாஃபைபர் என்ற இல்லங் களுக்கான பிராட்பேண்ட் இணைப்பு சேவையை யும் அறிவித்தது.

ஜியோ 2 விலை என்ன?

ஜியோ 2 ஃபோன் ஆகஸ்ட் 15-ம் தேதி சந்தைக்கு வருகிறது. அறிமுக விலையாக ரூ.2,999 நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

ஜியோ ஃபோன் பருவமழை கால ஹங்காமா என்ற சலுகை அரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஜியோ ஃபோனை அளித்து விட்டு ஜியோ 2 ஃபோனை வெறும் ரூ.501-க்கு பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆஃபர் ஜூலை 21-ல் ஆரம் பிக்கிறது.

ஸ்பெஷிஃபிகேஷன்ஸ்:

டூயல் சின், நேனோ சிம் கார்டு பொருத்தும் வசதி, 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே. KAI ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது.

512 எம்.பி. ராம் மற்றும் 4ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. 128 ஜிபி எக்ஸ்பாண்டபிள் மெமரி. 2 மெகாபிக்சல் பேக் கேமரா மற்றும் VGA பிரன்ட் கேமரா உள்ளது.

2000mAh திறன் கொண்ட பேட்டரி. VoLTE, VoWiFi, என்எஃப்சி, ஜிபிஎஸ், ப்ளூடூத், எஃப்.எம். கனக்டிவிட்டி உள்ளது.

வாய்ஸ் கமாண்டுக்கான பட்டனும் உள்ளது.
யூடியூப், வாட்ஸ் அப் வசதியுடன் ஜியோ ஃபோன் 2 அறிமுகம் ! யூடியூப், வாட்ஸ் அப் வசதியுடன் ஜியோ ஃபோன் 2 அறிமுகம் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on July 06, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 THinamnew.blog. All rights reserved
close