செல்போன் பற்றிய சில முக்கிய விஷயங்கள் தெரிந்து கொள்ளுங்கள் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
எல்லாருக் குமே கைக்குழந்தை யாகி விட்டன, செல்போன் கள். எப்போதும் சிணுங்கிக் கொண்டி ருப்பது அதன் மழலை மொழி. மாறாத நேசம் நமக்கு அதன் மீது.
ஆனால் குழந்தை களுக்கும், செல்போன்க ளுக்கும் சில வித்தியாசம் உண்டு.
நாம் தாலாட்டு வதற்கு பதில் அது தான் மெல்லிசை பாடல் களால் நம்மைத் தாலாட்டி தூங்க வைக்கும்.
அதோடு அவசியமான விஷயங் களை நினைவு படுத்தும். அதை சீராட்டி, பாராட்டி பாதுகாத் தால் நீண்ட நாள் பலன் தரக் கூடியவை.
உங்கள் செல்போன் களை பாதுகாக்க இதோ அருமையான டிப்ஸ்…
எபோதும் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) உபயோகி க்கும் பழக்கத்தை ஏற்படு த்திக் கொள் ளுங்கள்.
இதனால் உங்கள் செல்போனை மற்றவர்கள் பயன் படுத்த முடியாமல் செய்வதோடு,
உங்கள் அந்தரங்க விஷயங் களையும் பாதுகாக்கும். புளூடூத் மற்றும் வி.பி. போன்ற தொடர்பு இணைப் புகளை பயன்படுத்தி முடித்தவுடன் `ஆப்’ செய்து விடுங்கள்.
குறைந்த விலையில் அல்லது இலவச மாகக் கிடைக்கும் தேவை யற்ற பாதுகாப்பு மென்பொரு ட்களை பதிவிறக்கம் செய்து பயன் படுத்த வேண்டாம்.
எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். வழியாக வைரஸ்கள் பரவுவதால் கவனமாக கையாளவும்.
முன்பின் தெரியாத வர்களின் எஸ்.எம்.எஸ்.களுக்கு பதிலளிப்பது அல்லது `மிஸ்டுகால்’ களுக்கு தொடர்பு கொள்வதை தவிர்த்து விடுங்கள்.
எஸ்.எம்.எஸ். கள் வழியாக வரும் புதிய அறிவிபு களை தகுந்த எச்சரிக்கை உணர்வுடன் அணுகலாம். அல்லது தவிர்த் தாலும் நல்லதே.
தேவையற்ற `ஸ்பாம்’ மெசேஜ்கள் அடிக்கடி வந்து கொண்டி ருந்தால் வாடிக்கை யாளர் சேவை மையத்தில் புகார் அளிக்கலாம்.
அவசிய மற்ற மற்றும் அந்தரங் கமான, ஆபாச விஷயங் களை மொபைல் களில் தேவையில் லாமல் சேமித்து வைப்பதை தவிர்க்கவும்.
உங்களது செல்போனின் ஐ.எம்.ஈ.ஐ. நம்பரை டைரி அல்லது பாதுகாப் பான இடத்தில் குறித்து வைத்துக் கொள்ளு ங்கள்.
இது மொபைல் திருட்டு போனால் கண்டு பிடிக்கவும், தடை செய்யவும் வசதியாக இருக்கும்.
செல்போன் களுக்கு உறை அணிந்து பயன் படுத்துவது, டிஸ்பிளே திரையில் உராய்வு ஏற்படு வதை தடுக்கும்.
பட்டன்கள் விரைவில் பாதிக்க படுவதையும் குறைக்கும். செல்போன் களை கழுத்து பட்டையுடன் இணைத்து பயன் படுத்துவது சிறந்த முறை.
தண்ணீ ரில் விழுவ தாலும், கீழே விழுந்து உடைந்து விடுவதாலும் நிறைய போன்கள் சேதமடை கின்றன.
செல்போன் களை கைப்பை யில் வைத்து பயன் படுத்துவதும், அவசிய மான நேரங்களில் மட்டும் உபயோகி ப்பதும் உங்களுக்கு நல்லது.