Recent Posts


சிசிடிவி கேமரா பொருத்த எளிய வழிமுறைகள்.!

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
வீட்டில் வீடியோ கண்காணிப்பு கேமரா பொருத்துவது அனைவருக்குமே மிகவும் நல்லது.
நாம் வீட்டில் இல்லாத சமயம் உங்கள் வீட்டை யார் பாதுகாப்பது என்று சிந்தித்து இருக்கின்றீர்களா?

அந்த நேரங்களில் உங்கள் பொருட்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக உள்ளார்களா என்பதை தெரிந்து கொள்ள உங்களுக்கு உதவும் வீடியோ கண்காணிப்பு கேமரா.

இன்று பல கடைகள், சமூக கூடங்கள், மற்றும் பொது இடங்களில் 24×7 வீடியோ கண்காணிப்பு அடங்கிய CCTV கேமரா பொருத்துகின்றனர்.

பின்பு ஏன் உங்கள் வீட்டில் பொருத்தக் கூடாது. இங்கு வீடியோ கண்காணிப்பு பொருத்த சில எளிய முறைகளை தான் தொகுத்திருக் கின்றோம்.

உங்கள் போனுடன் வெப்கேம் பொருத்தவும்:

வெப்கேம் போன்ற கேமராவை நீங்கள் ஏற்கனவே உங்கள் வீட்டில் பொருத்தி இருக்கக் கூடும்.

இந்த வெப்கேமை செக்யூரிட்டி கேமராவாக பொருத்தி கொள்ள முடியும். Icam மிகவும் பிரபலமான மென்பொருளாக இயங்கி வருகின்றது.

இதை விண்டோஸ் மற்றும் மேக் கணினியுடனும் அல்லது ஐபோனுடன் இணைத்து கொள்ள வேண்டும்.

இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

இதற்கு உங்கள் மொபைல் ஆப்பில் $5 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

பழைய ஸ்மார்ட் போனை பயன்படுத்தவும்:

உங்கள் பழைய ஸ்மார்ட் போனை பயனுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் இது.

இன்றைய காலக் கட்டத்தில் எல்லா போனிலும் கேமரா உள்ளது ஏன் நீங்கள் அதை பயன் படுத்தக் கூடாது.

ஐபோன், ஆண்ட்ராய்ட் ப்ளாக்பெரி என எதுவாக இருந்தாலும் அதில் உள்ள கேமரா உங்களுக்கு பயன் தரும்.

உங்கள் பழைய போனில் இருந்து புதிய போனுக்கு நேரலையில் வீடியோ அனுப்பக் கூடிய பொருத்தமான ஆப்ஸை மட்டும் தேடி எடுங்கள்.

எடுத்துக் காட்டாக presence. இது ஒரு இலவச iOS ஆப். இதன் மூலம் வை-பை அல்லது மற்ற நெட்வர்க் மூலம் லைவ் பார்க்கலாம் .

ஆக்ஷன் கேம் – FLIR FX:

இந்த கண்காணிப்பு மற்றும் ஸ்போர்ட் கேமரா அம்சம் கொண்ட ஒரு டூ இன் ஒன் கேமரா உங்களுக்கு உதவும்.

இதில் உள்ள FLIR FX அம்சம் 160 டிகிரி கோணத்தில் படம் பிடிக்கவும் மற்றும் 1080p பதிவு செய்யவும் உதவும்.

இதனால் வெப்பம் மற்றும் ஈரப்பதம் போன்ற வற்றை பதிவு செய்ய முடியும். இது ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் செயலிகளில் செயல் புரியும்.

Go Professional:

இங்கு பட்டியல இடப்பட்டுள்ள மற்றவைகளை போல் இல்லாமல் வீட்டு கண்காணிப்பு கேமராவில் இது மிகவும் கச்சிதமானது.

இது முக்கியமாக வீட்டு கண்காணிப்புக் கென்று வடிவமைக்கப் பட்டுள்ள செயலி என்பதால் கொஞ்சம் அதிக செலவாகும் என்றாலும் மிகவும் சிறப்பானது.

இதில் அதிக பவர் இருப்பதால் சில நேரங்களில் நெட் மூலம் நீங்கள் இதை பயன் படுத்தும் போது வேறு ஒருவர் தவராக கையாளக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

Raspberry Pi Security Cam Raspberry:

Pi Security Cam விலை மலிவு என்பதுடன் இதனை யுஎஸ்பி வெப்கேம் அல்லது PI கேம் மூலம் செயல் படுத்த முடியும். இது லேசான எடை உடையது.
சிசிடிவி கேமரா பொருத்த எளிய வழிமுறைகள்.! சிசிடிவி கேமரா பொருத்த எளிய வழிமுறைகள்.! Reviewed by Fakrudeen Ali Ahamed on July 10, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 THinamnew.blog. All rights reserved
close